கந்தக அமிலக் கசிவு ஸ்டெர்லைட் ஆலையில் தீவிரமாக இருந்தது! வேதாந்தா நிறுவனம்
வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலத்தை இட மாற்றம் செய்யும் பணிகள் தொடரும் நிலையில், அமிலக் கசிவு கடுமையாக இருந்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
பராமரிப்பு பணிக்காக மின் இணைப்பு கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், அமிலக் கசிவு கடுமையாக இருந்ததாகவும், இதனால் தீவிர சுற்றுச் சூழல் பாதிப்புக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், இதுவரை சுமார் 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறினார். 24 மணிநேரமும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.