வெளிப்படை தன்மையுடன் தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது!அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குறை கூற முடியாத அளவில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், கல்வியுடன் ஒழுக்கம், நற்பண்புகள் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்காலத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய வாழ்க்கை தரம் சிறந்த கல்வியாளர் மற்றும் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.