192 பேர் வரை இந்தோனேசியா படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கியிருக்க கூடும் என அச்சம்!
சில தினங்களுக்கு முன்பு, இந்தோனேசியாவில், படகு கவிழ்ந்து விபத்தில், தண்ணீரில் மூழ்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 192 பேர் வரை இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வடக்கு சுமத்ரா தீவில், தோபா(( Toba )) என்ற பெயரில் பிரம்மாண்ட ஏரி அமைந்திருக்கிறது. இங்கு படகு சவாரி செய்தவாறு, சூரிய அஸ்தமனத்தை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் திரள்வர்.
இந்த வகையில், கடந்த திங்கட்கிழமையன்று, ஒரு படகில் 213 சுற்றுலா பயணிகள், தோபா ஏரியில் படகுசவாரி செய்துள்ளனர். தனது பயணத்தை தொடங்கிய 20ஆவது நிமிடத்தில் படகு நிலைதடுமாறி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முதலில், 130 பேர் வரை மூழ்கியிருக்க கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், 192 பேர் வரை நீரில் மூழ்கியிருப்பார்கள் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வெறும் 60 பேர் பயணிக்க கூடிய இரண்டு அடுக்குகளை கொண்ட படகில், 213 பேர் பயணித்திருப்பதே, விபத்திற்கு காரணம் என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.