காவிரி மேலாண்மை ஆணையம் : குமாரசாமி அதிரடி முடிவு..!

Default Image

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சமீபத்தில் மதுரையில் கூறுகையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்றார். ஆனால் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.

மழையால் கபினி அணை நிரம்பியதால் வேறுவழியின்றி உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. மழை நின்றதால் தண்ணீரை நிறுத்தி விட்டது. இதில் கர்நாடகத்தின் பங்கு எதுவும் இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காமல் மீண்டும் கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது. இதுதொடர்பாக குமாரசாமி அளித்த பேட்டி வருமாறு:-

Image result for காவிரி மேலாண்மைகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த செயல் திட்டத்தில் (ஸ்கீம்) கர்நாடகத்துக்கு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக செயல் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவரை உறுப்பினர்களை அறிவிக்க மாட்டோம்.

இதனால் என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால், கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளப்பது, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்விடுவது, எந்தப் பயிர்கள் நடவு செய்வது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்தப் பயிரை நடவு செய்ய வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு செய்யும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல் திட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கர்நாடகம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் இதுகுறித்து விவாதம் செய்வதில் தவறியுள்ளனர். என்றாலும் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி அண்டை மாநிலங்களுடன் தண்ணீரைப் பங்கிட்டு கொள்வோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Naxals Chhattisgarh Bijapu r
HMPV Virus
hair growth (1)
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin