காஞ்சிபுரம் அருகே மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட தேவாங்கு மற்றும் கிளிகளை பறிமுதல்!

Default Image

மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட அரிய வகை தேவாங்கு மற்றும் கிளிகள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில்  பறிமுதல் செய்யப்பட்டன.

புரஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கவுஸ்கான் என்பவர், உயிரினங்களை வைத்து மாந்திரீகம் செய்வதாக, வேளச்சேரி வனசரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கவுஸ்கானிடம் இருந்து தேவாங்கு, அலெக்சான்ட்ரின் பேரகிட் (alexandrine parakeet ) வகையை சேர்ந்த ஒரு கிளி மற்றும் மூன்று சாதாராண வகை கிளிகளையும் பறிமுதல் செய்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கவுஸ்கான் கைது செய்யப்பட்டார்.

சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கவுஸ்கானிடம் மாந்திரீகத்திற்காக அணுகியதாக தெரியவந்துள்ளது. சொத்து பிரச்சனையில் கவுஸ்கான் மீது ஆத்திரத்தில் இருந்த அவரது மகன், இந்த சம்பவம் பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்