முறைகேடு கூட்டுறவு சங்க தேர்தலில் நடக்கவில்லை!அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று  கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறையினர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்க்கடன், உரம் வினியோகம், ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டுறவு சங்கம் அ.தி.மு.க. அரசால் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு அரசியல் இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த முறைதான் சக்கரபாணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதுவும் கூற முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைவது பற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார். அதனால் நான் எதையும் கூற விரும்பவில்லை. கூட்டுறவு அச்சகங்களில் பழைய மிஷின்கள் இருக்கிறது. அதனை மாற்றி நவீன ரக மிஷின்கள் வாங்கி வருகிறோம்.

அ.தி.மு.க. வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு வழங்கியது. இது ஊழியர்களுக்கு தெரியும். 5 ஆண்டு முடிவுற்று இருக்கிறது. சம்பள உயர்வு குறித்து முதல்வரே அறிவிப்பார். மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் இந்த அரசு எடுக்காது.

நடப்பாண்டில் 8 ஆயிரம் கேடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.102.79 கோடிக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 281 அம்மா மருந்தகம் மூலம் ரூ.700 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவிரைவில் 61,851 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்