பாஜக கூட்டணி முறிவு : சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரி மெகபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Mubarak ho, unholy alliance of #pdp #bjp ended in JK. Now Jammu Kashmir is going to b #bjp mukt.
— Mohd Amir Banday (@amir_banday) June 19, 2018
இந்நிலையில், பா.ஜ.க காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க ஆதரவு பெற்ற ஆட்சியின் முதல் நாளில் இருந்தே காஷ்மீர் மக்கள் நிம்மதியுடன் இல்லை எனவும், பா.ஜ.க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.