டியூசன் சென்ற 6 பள்ளி மாணவர்கள் மாயம்..!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கமாக்ஷிப் பாளையா பகுதியைச் சேர்ந்த 6 மாணவர்கள் செண்ட் லாரன்ஸ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை டியூசன் செல்வதாக கூறி வெளியே சென்ற 6 மாணவர்களும் இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். மேலும், மாயமான மாணவர்களில் ஒருவரிடம் செல்போன் இருந்துள்ளது. அதற்கு தொடர்பு கொண்ட போது போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். மாணவர்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 6 மாணவர்களும் ஒரே நேரத்தில் மாயமானதால் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் சுற்றுலா சென்றிருக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு மாணவர்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.