போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக ஏராளமானோர் பதிவு செய்திருந்தனர். அனைவரும் தேர்வு எழுதும் இடத்திற்கு வந்தனர். தேர்வு முறைகேட்டை தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
குறிப்பாக பிரிசாபாத்தில் உள்ள ஜிஜி பெண்கள் கல்லூரியில் தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வாளர்கள் செருப்பு, ஷீ, பெல்ட் போன்ற பொருட்களை அணியக்கூடாது. பாதுகாப்பு சோதனையின் போது அவற்றை தேர்வறைக்கு வெளியே விட்டு செல்ல வேண்டும் என வலியுறுத்துவர்.
ஆனால், இந்த தேர்வின் போது மாணவிகள் தங்களின் தாலி மற்றும் காதணிகளை கழட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளது. இது பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் கண்டிப்பாக கழட்ட வேண்டும் என வலியுறுத்தியதால் திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை கழட்டி வைத்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட மாஜிஸ்ட்ரேட், தேர்வாளர்கள் வழக்கமான முறைப்படியே சோதனை செய்யப்பட்டனர். அவர்கள் நகைகளை அகற்ற கூறியது தவறு அல்ல. ஆனால் அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட கூடாது என தெரிவித்தார்.