வசூல் வேட்டையை தொடங்கிய சந்திரமுகி 2! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
சந்திரமுகி முதல் பாகம் ரசிகர்ளுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகத்தை அதே இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (செப்டம்பர் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகினது
இந்த இரண்டாவது பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இதில், மஹிமா நம்பியார், வடிவேலு, லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, சுரேஷ் சந்திர மேனன், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை 60 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த பலரும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும், படத்தில் பாடல்கள் மிகவும் மோசம் என்றும், இந்த படத்திற்கு பாடல்கள் தேவையே இல்லை என கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
இப்படி, கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவளின்படி, இந்திய அளவில் இப்படம் ரூ. 7.5 கோடி வசூலித்திருக்கலாம் என்றும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடி கிட்ட வசூலித்திருக்கலாம் எனவும் உலகளவில் மொத்தம் ரூ.15 கோடி தொட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வசூல் இன்னும் அடுத்தடுத்த நாட்கள் மேலும் அதிரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காரணம் தொடர் விடுமுறை தினம் என்பதால், டபுள் மடங்கு வசூலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.