Rind Chutney : அட இந்த பழத்தின் தோலில் சட்னி செய்யலாமா..? அது எப்படிங்க..?
நாம் அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோலை நாம் தூக்கி எரிந்து விடுவோம். இனிமேல் அந்த தோலை தூக்கி எரியாமல், அந்த தோலை வைத்து நாம் சமையல் செய்யலாம். தற்போது இந்த பதிவில் தர்பூசணி தோலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தர்பூசணி தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தோலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. தற்போது இந்த பதிவில், தர்பூசணி தோலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தர்பூசணி தோல் – 1 கப்
- வரமிளகாய் – 4
- உளுந்து – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- உப்பு தேவையான அளவு
- கடுகு – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைக்க வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான் பின், அதில் உளுந்து, வரமிளகாய், தக்காளி, வெங்காயம் மற்றும் தோல் நீக்கி நறுக்கி வைத்துள்ள தர்ப்பூசணி தோல் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
பின்பு வதக்கி வைத்துள்ளவற்றை ஆற வைக்க வேண்டும். ஆறிய பின், அதனை மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை பெரிய விட்டு, அதனை சட்னியில் கலந்து கிளறி விட வேண்டும். இப்பொது சுவையான தர்பூசணி சட்னி தயார்.
தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்யாமல், இப்படி வித்தியாசமான முறையில் சட்னி செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சுவையாகவும் காணப்படும்.