எந்த சாமி நினைத்தாலும் காவிரி விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்,காவிரி விவகாரத்தில் இனி கட்டப்பஞ்சாயத்திற்கு வேலையில்லை என்றும், இனி எந்த சாமி நினைத்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்திப்பதால், எதுவும் நடக்கப்போவதில்லை எனக் கூறிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி ஆணையம் செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள், மீண்டும் அதிமுகவுக்கே திரும்பிவருவார்கள் என்றும், அது காலத்தின் கட்டாயம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.