Big Billion Days: 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி.! களைகட்டப்போகும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே..!

Big Billion Days Sale

இந்தியாவின் மிகப்பெரிய இகாமர்ஸ் ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடங்கும் தேதியானது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விற்பனையின் போது, ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு பிளிப்கார்ட் அதிக அளவிலான தள்ளுபடியை வழங்குகிறது. எனவே இது போன்ற உபயோகமான, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கும் இதுவே சரியான நேரம்.

பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளஸ் பிரீமியம் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே, அக்டோபர் 8ம் தேதியே ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் அனைத்து தள்ளுபடிகளையும் பெறுவார்கள். இதில் எலக்ட்ரானிக்ஸ் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.

டேப்லெட்டுகளுக்கு 70 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. டிவி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. இதில் உயர்தர 4k ஸ்மார்ட் டிவிகளுக்கு 75 சதவீதமும், குளிர்சாதன பெட்டிகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வாஷிங் மெஷின்கள் ரூ.4,990 என்று விலையில் இருந்து தொடங்குகிறது. ஏர் கண்டிஷனர் ரூ.21.999 என்ற விலையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. இதைத்தொடர்ந்து, ஃபேஷன் பொருட்களுக்கு 60 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அழகு மற்றும் விளையாட்டு சார்ந்து பொருட்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி.

சமையல் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபகரண பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. அதோடு விமானம் மற்றும் ஹோட்டல்கள் புக்கிங் செய்தால் அதற்கு சிறப்பு சலுகைகள் உள்ளது. மேலும் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்தால் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்