திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது – சீமான் திட்டவட்டம்!

Seeman

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில்  மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

தேர்தல் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்கட்சிகளில் தொகுதி பங்கீடு, கூட்டணி, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது, பெரும் அடியாக அமைந்துள்ளது. ஏனென்றால், அந்த கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சியாக விளங்கியது. தமிழகத்தில் கணிசமான இடங்களை பிடித்து வெற்றி பெற வேண்டும் என்று  நினைத்திருந்த நிலையில், கூட்டணியில் விலகியது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகளாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி எப்படி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக அதிமுகவின் கூட்டணி எப்படி இருக்கும், யாருடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றோம். ஆனால், சிலர் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யலாம் என ஏற்கனவே சீமான் கூறியிருந்த நிலையில், இன்று மீண்டும் நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து தான் போட்டியிடும் என்று அதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்