லக்னோவில் விராட் ஓட்டலில் தீ விபத்து : 2பேர் பலி ..!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விராட் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தீ விபத்து காரணமாக ஓட்டலின் கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்துள்ளது. ஓட்டலின் சமையல் அறையில் காஸ் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓட்டலில் கட்டுப்படுத்த முடியாத அளவு ஏற்பட்ட தீ தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. விபத்து தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.