2000 ரூபாய் வைத்துள்ளீர்களா.? போக்குவரத்து கழகம் , அறநிலையத்துறை, பெட்ரோல் பங்குகளின் அடுத்தடுத்த அறிவிப்பு.!   

2000 rs note

இந்தியா முழுக்க புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என்று சில மதஙளுக்கு முன்னரே ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

செப்டம்பர் 30க்குள் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தி இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவித்த நிலையில், பொதுமக்கள் வங்கிகள் தவிர ஆன்லைன் பொருட்களை வாங்குவது, பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து கழகம் என இன்னும் சில பயன்பாட்டிற்கு 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு வந்தன.

தற்போது மேற்கண்ட சேவைகள் ஒவ்வொன்றாக 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கான தங்கள் கடைசி நாளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே, பிரபல ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் தளமான கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியோடு கேஷ் ஆன் டெலிவெரி எனப்படும் பணம் பெற்று பொருள் வாங்கும் நடைமுறையில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டது.

அதே போல சில தினங்களுக்கு முன்னர் அரசு போக்குவரத்து கழகமும் இன்று (செப்டம்பர் 28) முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அறநிலையத்துறையும் அறிவித்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில் உண்டியல் பணத்தை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், அதனை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 29)ஆம் தேதி அன்று கோவில் உண்டியல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உண்டியல் தொகை திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதே போல தற்போது பெட்ரோல் பங்க் சங்கமும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (செப்டம்பர் 28) முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் வாங்கப்பட  மாட்டாது என்றும் , 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுங்கள் என்று பெட்ரோல் பங்குகள் சங்கம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்