கட்டுங்கடங்காத ரசிகர்கள் கூட்டம்!! காவல் துறைக்கு கடிதம் எழுதிய லியோ தாயரிப்பு நிறுவனம்!
வருகின்ற 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் வெளியீட்டிற்கு முன்னதாக, ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்தனர். ஆனால், லியோ படத்தின் தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதில்லை என்று அறிவித்தது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக அளவில் ‘டிமாண்ட்’ இருந்த காரணத்தாலும், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், ரசிகர்கள் நலன் கருதி இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்றும், இதில் எந்தவித அரசியல் தலையீடோ மற்ற தலையீடுகள் எதுவுமில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இருந்தாலும் நேற்று படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து ரசிகர்களை கூல் செய்தனர். இந்நிலையில், ஜூன் 30ம் தேதி நடைபெற இருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், முன்னதாக நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி காவல்துறைக்கு கடந்த 20ம் தேதி கடிதம் எழுதினோம். தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு விழாவை ரத்து செய்துள்ளோம். எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் எங்களது நன்றியை முழு மனதுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால், ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா நடக்காததற்கு ஒரு காரணம், சமீபத்தில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் கச்சேரி நிகழ்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. அதாவது, அந்த கச்சேரியில் கலந்து கொண்ட பலர், கச்சேரியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் கூட இசையை கச்சேரியை பார்க்க நூற்றுக்கணக்கானவர்களுக்கு இடம் கூட கிடைக்கவில்லை, கச்சேரிக்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், மொத்தமாக 20,000 இருக்கைகள் கிட்ட இருந்த அந்த இடத்தில் அதற்கு மேல் பலரும் கூட்டமாக கூடிய காரணத்தால் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறினார்கள். இதனால், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் கச்சேரி முடிவதற்கு முன்பே பாதியிலேயே வீட்டிற்கு சென்றனர் இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை கருத்தில் கொண்டு லியோ படக்குழு இந்த கணத்த முடிவை எடுத்துள்ளார்கள். அனாலும், இசை வெளியீட்டு விழா ரத்து செய்துள்ள நிலையில், படம் பற்றிய அப்டேட்டை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். அதன்படி படத்தின் அப்டேட்களை வழங்கி வருகிறது. படம் வெளிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்கள் லியோ அப்டேட்கள் குவியும் என தெரிகிறது.