திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு.! மேலும் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு.! 

One child dead due to Dengue Fever

தமிழகத்தில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் வருவதுண்டு. தற்போது  மழைக்காலம் ஆரம்பித்துளளதால். சளி, காய்ச்சல் ஆகிய நோய்கள் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடனும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம்  சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் , சுமித்ரா தம்பதியின்  மூன்று குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மூவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் 7 வயதான யோகலட்சுமி, 4 வயதான அபிநிதி, 8 மாத குழந்தை புருஷோத்தமன் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யோகாலெட்சுமி மட்டும் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.

அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகியோருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டு வந்த நிலையில், நேற்று இரவு  4 வயதான அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உயிரிழந்த சிறுமி அபிநிதி உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யோகாலெட்சுமி மற்றும் புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்