மீண்டும் வாய்ப்பு இல்லை.. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி! கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி!

kp munusamy

தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட மோதல் கூட்டணி முறிவில் கொண்டுவந்து விட்டது. கூட்டணியில் இருந்துகொண்டே முன்னாள் தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேவையில்லாத வார்த்தைகளை விட்டதால் அதிமுகவினர் எதிர்வினையாற்றினார். இது எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கும் சென்று இருந்தது. இதுபோன்று அண்ணாமலை – அதிமுக இடையே தொடர் மோதலால், இதற்கு முடிவு கட்ட பாஜக தலைமையை அதிமுக நிர்வாகிகள் நாடினர். அப்போது, அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இருப்பினும், அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக சற்று தலைதூக்கியுள்ளது என்றே கூறலாம். இதன் காரணமாக, அதிமுகவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கூட்டணி குறித்து முக்க்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவினர் இருந்தனர். இதில், ஒரு தரப்பு கூட்டணி தொடர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு வேண்டாம் எனவும் கூறியதாகவும், இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இபிஎஸ் தள்ளப்பட்டார்.

இந்த சூழலில் தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலரும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என தெரிவித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியும் ஒரு முடிவுக்கு வந்து, இனி பாஜவுடனான கூட்டணி இல்லை, வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து அறிவிப்பு வெளியானது. இது அதிமுகவினர் இடையே வரவேற்ப்பை அளித்தது. ஆனால், பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா என தமிழக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கேற்ப, கூட்டணி முறிவுக்கு பிறகு அதிமுக – பாஜக நிர்வாகிகள் மவுனம் காத்து வந்தனர். இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. பாஜகவை கேட்டால், எங்களது தலைமை கூறிய பிறகு சொல்கிறோம் என்றும் பாஜகவை குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என அதிமுக கூறியதும் இந்த சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கூறுவது நடக்காது. அதிமுக மீதான அச்சத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது.

அண்ணாமலையை மாற்ற கோரி கோரிக்கை வைக்கவில்லை, அந்த பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது என்பது சிறுபிள்ளைத்தனமானது. பாஜகவுடன் கூட்டணியை முறிப்பது 2 கோடி  தொண்டர்களின் உணர்வு, அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றார். எனவே, எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலே கூட்டணி முறிவு என கூறினார்.

பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல் எனவும் விளக்கமளித்தார். மேலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார். அதாவது, மக்கள் நலனை முன்வைத்து நாடாளுமன்ற தேர்தலில் குரல் எழுப்புவோம் என கூறினார். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள், அதனால் மக்கள் நலனை முன்வைத்தே எங்கள் குரல் ஒலிக்கும் எனவும் தெரிவித்தார். இந்த பெட்டிக்கு பிறகு பாஜகவும் கருத்து கூறும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP