புரட்டாசி மாத ஸ்பெஷல்..! மீன் வறுவலை விட அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் இதோ..!

KARUNAI KILANGU

புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து விடுவர். இந்த புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவுகளை தான் செய்து சாப்பிடுவர். ஆனால், மாமிச பிரியர்கள் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல், இந்த புரட்டாசி மாதத்தை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு,  மீன் வறுவலை மிஞ்சும் அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் செய்து கொடுக்கலாம்.

கருனை கிழங்கின் பயன்கள் 

இந்த கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C  போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். கருணைக் கிழங்கீழ் நார்சத்து அதிகமாக காணபப்டுவதால் இது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கவும் பயன்படுகிறது.

கருணைக் கிழங்குகள் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. இந்த கிழங்கில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே கருணைக் கிழங்குகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

தற்போது இந்த பதிவில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான கருனை கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • கருனை கிழங்கு – கால் கிலோ
  • எண்ணெய் தேவையான அளவு
  • மிளகு தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சோம்பு தூள் – கால் ஸ்பூன்
  • தனியா தூள் – கால் ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், கருணைக்கிழங்கை தோல் உரித்து மிகவும் மெல்லியதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பொரிப்பதற்கு  ஏற்றவாறு நமக்கு பிடித்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.

பின் அதில் மிளகாய் தூள், சோம்பு தூள், தனியா தூள், சிறிதளவு உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்த பின் அதனுள்  தயார் செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கை அதனுள் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

இந்த கிழங்கை சாதத்துடன் கொடுத்தால், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக அசைவ பிரியர்கள் இவ்விரு செய்து கொடுக்கும் போது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அலர்ஜி பிரச்னை கருனை கிழங்கில் செய்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad