உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கணுமா..? அப்ப இந்த உணவுகளை கொடுங்கள்..!

Babyfood

பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் தான் பெற்றோருக்கு முக்கியமானது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களுக்கு உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நம் குழந்தைகளுக்கு எந்த உணவுகளை நாம் கொடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில் நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் பற்றி பார்ப்போம்.

பொதுவாக 6 முதல் 23 மாத குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு துணை உணவுகள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தைக்ளுக்கு கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவு வகைகள் குழந்தைகளுக்கு உடல் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும், அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

காய்கறி சூப்

காய்கறி சூப்  என்பது குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். இது அவர்களுக்கு சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வெள்ளரி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற பல்வேறு காய்கறிகளைப் வைத்து சூப் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது காரம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

காய்கறி ஸ்மூத்தி 

காய்கறி ஸ்மூத்தி என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். பச்சை காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு தேவையான இனிப்பு கலந்து கொடுக்கலாம்.

அதே போல் பச்சை காய்கறிகளை அவித்து, அவர்களுக்கு உணவாகக்கொடுக்கலாம். காய்கறிகளில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.

பழங்கள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்களாகும். பழங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் பழங்கள் உதவுகிறது.

குழந்தைகள் புதிய உணவுகளை முயற்சி செய்யும் போது, முதலில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். குழந்தை பழங்களை சாப்பிட மறுத்தால் குழந்தைகளுக்கு எந்தவகையில் கொடுத்தால் அதனை சாப்பிடுவார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பழங்கள், பால் அல்லது தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பழ ஸ்மூத்தி தயாரித்து வழங்கலாம். பல்வேறு வகையான பழங்களை வெட்டி, அவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து பழ சலாட் தயாரித்து கொடுக்கலாம்.

மாமிச உணவுகள் 

குழந்தைகளுக்கு மாமிச உணவுகளை கொடுக்க தொடங்கும் போது, ​​அவை நன்கு சமைக்கப்பட வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் எதுவாக இருந்தாலும் அவற்றை நன்றாக வேக வைத்து சமைத்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் மிகவும் முக்கியமானவை. அவை புரதம், இரும்பு மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும். இது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு, உடல் எடை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்