அதிமுக – பாஜக முறிவுக்கு வேறு ஏதோ காரணம் உள்ளது – டிடிவி தினகரன்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாஜகவில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், பாஜகவை வைத்து தான் பழனிசாமி கட்சியை கையகப்படுத்தினார். கழக நிர்வாகிகளையும் வழக்கு பாயலாம் என மிரட்டி பணிய வைத்தார். இப்பொழுதாவது பாஜகவிற்கு பழனிசாமியின் துரோக சிந்தனை புரியும் என நினைக்கிறேன்.
ஸ்டாலின் ஆட்சி விளம்பர ஆட்சியாக மட்டுமே இருக்கிறது. பழனிசாமி ஆட்சி மீதான கோபத்தால் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். 2026 தேர்தலில் இருவரையும் ஒதுக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
அதிமுக – பாஜக முறிவிற்கு அம்மா, அண்ணா மீதான விமர்சங்கள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அவற்றையும் தாண்டி ஏதோ ஒரு காரணம் உள்ளது. அம்மா மீதான விமர்சனத்துக்கு பின்பு தான் டெல்லி சென்று கூட்டணியை உறுதி செய்தார்கள். டெல்லி சென்ற இபிஎஸ் தரப்பினர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம்.அப்படி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக இரண்டு மாதங்களில் முடிவெடுப்போம் இப்போது இருப்பது தலைவர் காலத்து அம்மா காலத்து அதிமுக இல்லை தவறானவர்களால் களவாடப்பட்ட கையகப்படுத்தப்பட்ட அதிமுக என விமர்சித்துள்ளார்.