கொடியேற்றத்துடன் நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தொடக்கம்!
கொடியேற்றத்துடன் நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி மீது வைத்து திருகொடிப்பட்டம் வீதியுலாவாகக் கொண்டுவரப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.