சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் அரசுக்கு எதிராகப் பேசத் தூண்டியதாக கைது!
சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ்,மன்சூர் அலிகானை சேலத்துக்கு அழைத்து வந்து விவசாயிகளை சந்திக்க வைத்து அரசுக்கு எதிராகப் பேசத் தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.
சேலத்துக்கு மே 3-ம் தேதி வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், சேலத்தை அடுத்த தும்பிப்பாடியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார்.
மன்சூர் அலிகான் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தும்பிப்பாடி விஏஓ., மாரி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் தீவட்டிப்பட்டி போலீஸார் சென்னை சென்று நடிகர் மன்சூர் அலிகானை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு நேற்று கொண்டு வந்தனர். பின்னர் மேட்டூரில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.
இந்நிலையில் மன்சூர் அலிகானை சேலத்துக்கு அழைத்து வந்து விவசாயிகளை சந்திக்க வைத்து அரசுக்கு எதிராகப் பேசத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷை தீவட்டிப்பட்டி போலீஸார் இரவு 9 மணி அளவில் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.