உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து..!
உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மீரட்டில் உள்ள பரத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரசாயன ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு தீவிபத்து ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து முதலில் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்தது.
ரசாயனம் என்பதால் தீயின் வீரியம் அதிகரித்ததை அடுத்து, அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரசாயனம் என்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அருகிலிருந்தோரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்