தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் நீக்கியதற்கு அன்புமணி கண்டனம்!
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ,சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். 19இந்திய மொழிகள், ஆங்கிலம் என 20 மொழிகளில் இருந்து ஏதேனும் இரு மொழிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என முன்பு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இது இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியும் தமிழ்மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் சதியுமாகும் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.