தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று சிறப்பு விசாரணைக்குழு கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சிபிஐ-யை அணுகவும் மனுதாரருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
முன்னதாக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.