திண்டுக்கல் அருகே 5 கார்கள், 2 சரக்கு வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
சாலையில் சென்ற 5 கார்கள் மற்றும் இரண்டு சரக்கு வாகனங்களை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தாக்கி கண்ணாடிகளை உடைத்த நபர்களை காவல்துறையினர் தீவிமாக தேடி வருகின்றனர்.
பழனி சண்முகபுரம் சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், அவ்வழியே வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, வாகன கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.