FIFA WORLD CUP 2018:ஸ்விட்சர்லாந்து – பிரேசில் அணிகள் மோதிய ஆட்டம் சமன்!
நேற்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்றது.
நேற்று இரவு நடைபெற்ற ஈ- பிரிவு ஆட்டத்தில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. 20வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கூட்டின்ஹோ (Coutinho) ஒருகோல் அடிக்க முதல் பாதியில் அந்த அணி முன்னிலை பெற்றது.
50வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் சுபேர் (Zuber) கோல் அடித்ததால் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கடுமையாகப் போராடியும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு 8.30 மணிக்கு எப் பிரிவில் வலிமை வாய்ந்த அணியும் நடப்பு சாம்பியனுமான ஜெர்மனி அணி மெக்சிகோ அணியை மோதியது. நடப்பு கால்பந்து தொடரில் கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாக கருதப்படும் ஜெர்மனி அணி மெக்சிகோவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் கோஸ்டாரிக்கா அணி மற்றும் செர்பிய அணிகள் மோதிய போட்டியில் செர்பியா அணி 1-0 வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.