முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை வருகை!
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி,நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது உள்ளிட்ட ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்தற்காக, அதிமுக வெற்றி விளக்கக் கூட்டம், சின்னக்கடைவீதியில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்கிறார். இதையொட்டி, திருச்சி மண்டல ஐ.ஜி தலைமையில், 2 ஆயிரத்து 500 போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்