இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம், வாட்ஸ்ஆப் பேமென்ட்க்கு அனுமதி..!
பே.டி.எம்., உள்ளிட்டவற்றுக்குப் போட்டியாக பேமென்ட்ஸை இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை அரசியல் சார்ந்த ஆய்வுக்கு பயன்படுத்தியதாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஃபேஸ்புக் வாட்ஸ் ஆப் பேமென்ட் வாடிக்கையாளரின் உள்கட்டமைப்புக்களைப் பயன்படுத்தினாலும், முக்கியத் தகவல்களை சேகரிக்கவோ, பயன்படுத்தவோ செய்யாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
போதிய விதிமுறைகளை ஆய்வு செய்த பின் அனுமதி வழங்குமாறு ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியிருந்த நிலையில், NPCI எனும் இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.