காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை! முதல்வர் பழனிசாமி
நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு தேவையான நிதி கோரியுள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விவசாயிகள் வளம்பெற, வேளாண் விற்பனை கூடங்கள் மேம்படுத்த கூடுதல் நிதி கேட்டுள்ளோம் .நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்க விரைவில் அனுமதி தர கேட்டுள்ளோம். தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன்.காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.