கடலூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!
தொடர் வழிப்பறி சம்பவங்களில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுப்பகுதியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், 81 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஒரு பெண்ணின் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 பேர், வேலுடையான்பட்டு என்ற இடத்தில் போலீசாரிடம் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் கலியமூர்த்தி, அன்பரசு என்பதும், நெய்வேலி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களது கூட்டாளிகளான ரவி, குணசேகரன் ஆகியோரையும் கைது செய்த போலீசார், 81 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற கும்பலிடம் திருட்டு நகைகளை வாங்கும் நகைக்கடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.