சிறப்பு டூடுல் மூலம் உலக தந்தையர் தினத்தை கொண்டாடும் கூகுள்!
தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாள் தந்தையர் தினம் ஆகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கவுரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.
இன்று (ஜூன் 17-ந் தேதி) உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையை கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. ‘அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
இந்நிலையில், அப்படிப்பட்ட அப்பாக்களை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 17) பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் ‘சிறப்பு டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.