டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை வரையறுக்கும் நிதி ஆயோக் அமைப்பின் 4 ஆவது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில், ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், முதலமைச்சர்களும், துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவது, மத்திய அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.