தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம்!அந்த தந்தைக்கான தினம் இன்று!
உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிள்ளைகளுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் தந்தையரைப் போற்றும் நாள் இந்த நாள்…
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம்!
தாயின் பெருமை குன்றில் ஒளி வீசும் ஜோதி என்றால், தந்தையின் அன்போ, குடத்தில் இட்ட விளக்கு! குழந்தையைக் கருவில் பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை!
பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்கு மகத்தானது. தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. முகநூல், வாட்ஸ் ஆப்கள் மூலம் தந்தையர் தினத்திற்கான வாழ்த்துகளும் குறுஞ்செய்திகளும் பரவிவருகின்றன. தந்தையை இழந்த பிள்ளைகளுக்கோ, அது ஒரு துளி கண்ணீராக விழிகளில் பூக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.