தூத்துக்குடி வன்முறையின் போது ஏற்பட்ட சேத நிலவரம் 15 கோடியே 67 லட்ச ரூபாய்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா,தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, 15 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடுதேடிச் சென்று போலீசார் கைது செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, தூத்துக்குடி கலவரத்தில் 15 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 331 அரசு மற்றும் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை தவிர வேறு யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை என்றும், பெண்கள், குழந்தைகள் யாரும் கைது செய்யப்படவோ, துன்புறுத்தப்படவோ இல்லை என்றும் முரளி ரம்பா தெரிவித்திருக்கிறார். அமைதியை சீர்குலைப்பதற்காக வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.