ஜப்பானுக்கு 2.5 கோடி மெக்சிகோ அகதிகளை அனுப்பவா? ஜப்பான் பிரதமரை நேரடியாக மிரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்களது நாட்டில் தஞ்சமடைந்துள்ள இரண்டரைக் கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைப்பதாக, அந்நாட்டு பிரதமருக்கு ஷின்சோ அபேவுக்கு, மிரட்டல் விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி7 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்ததுடன், கூட்டமைப்பின் அறிக்கைக்கான ஆதரவையும் விலக்கிக் கொண்டார். இந்த நிலையில், பிறநாட்டு மக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதால், பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருப்பதாக கூறியுள்ள அதிபர் டிரம்ப், தஞ்சமடையும் அகதிகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜப்பான் போன்ற நாடுகள் தங்களுக்கு அறிவுரை கூறுவதாக சாடியுள்ளார்.
ஒரு அறையில் இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றும், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இரண்டரை கோடி அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பினால், நிலைமையை பிரதமர் ஷின்சோ அபே புரிந்து கொள்வார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.