உலக கோப்பை கால்பந்து 2018 போட்டியின் இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்..!
மதியம் 3.30 மணிக்கு கசன் அலினாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஹீயூகோ லோலிஸ் தலைமையில் பிரான்ஸ் அணியில் நட்சத்திர வீரர் கிரீஸ்மேன், பஷல்போக்பா, ரபெல் வரேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தன்னைவிட பலம் குறைந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதில் பிரான்சுக்கு சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
தர வரிசையில் 40-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியில் டாம் காஹில், மைக் ஜெடினக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அந்த அணி பிரான்சுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.
மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – ஐஸ்லாந்து மோதுகின்றன. 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி மெஸ்சியை அதிகம் நம்பி இருக்கிறது.
மேலும் செர்ஜியோ அகிரோ, டிமாரியோ, பெனிட்டோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பலம் குறைந்த ஐஸ்லாந்துக்கு எதிராக அர்ஜென்டினா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் ஐஸ்லாந்து அணியில் கேப்டன் ஆரோன் குளர்சன் நட்சத்திர வீரராக உள்ளார். அந்த அணி அர்ஜென்டினாவுக்கு ஈடு கொடுத்து விளளயாடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இரவு 9.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பெரு-டென்மார்க் அணிகளும், நள்ளிரவு 12.30 மணிககு நடக்கும் போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள குரோஷிமா-நைஜீரியா மோதுகின்றன.