ரம்ஜானையொட்டி வழக்கமாக இந்திய- பாக் வீரர்கள் இடையே நடக்கும் இனிப்பு பரிமாற்றம் நடக்கவில்லை!
பாகிஸ்தான் படை எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருவதால், வாஹா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், ரம்ஜான் பண்டிகைக்கு இனிப்புகளை பறிமாறிக் கொள்ளவில்லை. இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை நாளன்று, இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பறிமாறி, ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பறிமாறிக் கொள்வது வழக்கமாகும்.
ஆனால், கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகளை குறிவைத்து, தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு, இந்தியப் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால், வாகா எல்லையில், ரம்ஜானுக்கு வழக்கம்போல், ராணுவ வீரர்கள் இனிப்புகளை பறிமாறிக்கொள்ளவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.