கர்ப்பமாக இருக்கிறோமா என சோதனையிட்டார்கள்- போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் குற்றச்சாட்டு..!
இந்த நிலையில், பெண்களுக்கான உயரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என கடந்த 13-ந் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் காங்கிரஸ் தலைவர் திப்திசிங் மற்றும் கமல்நாத் வீட்டிற்கு சென்றார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினார்கள்.
“நாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம். முதலில் போலீசார் எங்களை வேனில் ஏற்றினார்கள், போபாலுக்கு மூன்று மணி நேரங்கள் பயணித்தோம். எங்களுடைய செல்போன்களை பறித்துக்கொண்டார்கள். எங்களுடைய பெற்றோர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டோம். நாங்கள் சிறைக்கு சென்றதும், நாங்கள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம், நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என தெரியும். நாங்கள் இருந்த அறைக்குள் ஆண்களும் நுழைந்தார்கள்,” என குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து உள்ளார்கள்.