தூத்துக்குடி சிவன் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றுவதற்கு தடை!பக்தர்கள் கடும் எதிர்ப்பு
அகல் விளக்குகள் ஏற்றுவதற்கு தூத்துக்குடி சிவன் கோயிலில் தடை விதிக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, கோயில்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவைகளை ஏற்றுவதற்கு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு கொண்டுவந்தது.
பக்தர்கள் விரும்பினால், கோயிலில் நிர்வாகம் சார்பில் வைக்கப்படும் விளக்கில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வழிபடவும் அறிவுறுத்தியது. இந்த நடைமுறை தூத்துக்குடி சிவன் கோயிலில் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.