தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை!
நேற்று இரவு சென்னையில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று வெப்பம் அதிகமாக இருந்தால், புழுக்கமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மாலையில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. மீனம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் புழுக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.