காதலியின் முகத்தில் காதல் தகராறில் கத்தியால் குத்திவிட்டு நாடகமாடிய காதலன்!
சென்னை அருகே காதல் தகராறில் காதலியை கத்தியால் குத்திவிட்டு நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.
சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் எர்ணீஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பினு. இவரது மகன் கவியரசன்(வயது22) வெல்டிங் வேலை செய்து வந்தார். திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில் தெருவில் வசிக்கும் பிளஸ்-2 படித்துள்ள இளம்பெண் குமுதா (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் குமுதா வேறொரு வாலிபருடன் செல்போனில் சிரித்து பேசியுள்ளார். இதனை கேள்வி பட்ட கவியரசன் குமுதாவை எண்ணூர் ரயில்நிலையம் அருகே வரவழைத்து பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த கவியரசன், காதலி குமுதா முகத்தில் கத்தியால் குத்தியுள்ளார் இதில் பலத்தகாயமடைந்த குமுதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கவியரசனே கொண்டு சேர்த்துள்ளார். மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து எண்ணூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
போலீசார் கவியரசனிடம் நடத்திய விசாரணையில், இரண்டு பேரும் எண்ணூர் ரயில்வே ஸ்டேசன் அருகேயுள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர்கள் 4 பேர் கத்தியால் குமுதாவை குத்திவிட்டு அவளிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு சென்று விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக கவியரசன் பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் கவியரசனிடம் தீவிரமாக விசாரித்தபோது, காதலி வேறோருவனை காதலிப்பதாக கூறியதால் ஆத்திரத்தில் காதலியை கத்தியால் குத்தி விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து. கவியரன் மீது எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியே அடங்காத நிலையில், கத்திவாக்கம் ரயில் நிலையத்திலும் காதலுக்காக காதலியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.