ரம்ஜான் ஸ்பெஷல் : சுவையான மட்டன் குருமா..!
மட்டன் குருமா கேள்விபட்டிருப்பீர்கள். இது உங்களுக்கான சிக்கன் குருமா.
தேவையான பொருட்கள் :
கோழி – சின்னதாக ஒன்று
இஞ்சி – ஒரு விரல் நீள அளவு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 10
கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
எண்ணெய் – 8 தேக்கரண்டி
பட்டை – ஒரு துண்டு
சீரகம் – இரண்டு தேக்கரண்டடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
தயிர் – 2 தேக்கரண்டி
செய்முறை :
1. இஞ்சியையும் , பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த இஞ்சி , பூண்டு விழுதலை , தயிருடன் கோழித் துண்டுகளின் மேல் தடவி , சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
3. வெங்காயம் , பச்சை மிளகாய் , சீரகம் , கொத்தமல்லித் தழையை நன்கு அரைக்கவும்.
4. பாத்திரத்தில் எண்ணெயை விட்டுக் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் பட்டையைப் போடவும். அரைத்த மசாலாவுடன் மஞ்சள் தூளை போட்டு வதங்கவிடவும்.
5. மசாலா தடவிய கோழித் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
6. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
7. கோழித் துண்டுகள் வெந்து , குழம்பு சுண்டி வந்ததும் இறக்கவும்.