உயர்நீதிமன்றம் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் ,சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தக் கல்லூரியில் கடந்த 2008-ஆம் ஆண்டு மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் குழு புதிய இடத்திற்கு கல்லூரியை மாற்ற பரிந்துரைத்தது. திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூரிலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும் வரும் கல்வியாண்டு முதல் புதிய கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய கட்டிடத்தையே சீரமைத்து கல்லூரியை செயல்படுத்த உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் இடமாற்றத்துக்கு தடைவிதிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.