எனது அம்மா மறைந்த பிறகு மிகவும் மோசமான நாள்- ஸ்பெயின் முன்னாள் பயிற்சியாளர்..!
ரஷியாவில் 21-வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது.
அந்த அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் இன்று நள்ளிரவு பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூலேன் லோபெட்டேகுய் இருந்து வந்தார்.
இவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். சம்மதம் தெரிவித்த அடுத்த நாளே (நேற்றுமுன்தினம்) ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பிரான்ஸ் கால்பந்து அசோசியேசன் தலைவர் தெரிவித்தார்.
ஸ்பெயின் கால்பந்து அசோசியேசனுக்கு தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற பத்திரிகை செய்தி வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது’’ என்றார்.
ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிய இருக்கும் ஜூலேன் லோபெட்டேகுய், இன்று ரியல் மாட்ரிட் அணிக்கான மைதானத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போது ஸ்பெயின் அணியில் இருந்து நான் தூக்கப்பட்டது, எனது அம்மா இறந்த பிறகு மோசமான நாள் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜூலேன் லோபெட்டேகுய் கூறுகையில் ‘‘எனது அம்மா மறைந்த பிறகு, எனது வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிய நாளாகும். ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராகும் இந்த நாள் என்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்’’ என்றார்.