ரம்ஜான் பண்டிகை – காஷ்மீரில் 115 கைதிகள் விடுதலை..!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, தடையை மீறி பேரணி சென்றது போன்ற வழக்குகளில் கைதானவர்களை ரம்ஜான் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, கொடுங்குற்றம் அல்லாத சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.