நடிகர்களுக்கு நடிகைகளால் பாலியல் தொல்லை – பிரபல நடிகர் குற்றச்சாட்டு..!
திரையுலகில் நடிகர்களுக்கு நடிகைகளால் பாலியல் தொல்லை இருப்பதாக பிரபல நடிகர் ரவிகிஷன் தெரிவித்துள்ளார்.
படவாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகிறார். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து அமலாபால், ராதிகா ஆப்தே, பார்வதி, சுனிதா ரெட்டி ஆகியோரும் திரைத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் ரவிகிஷன் சில நடிகைகள், நடிகர்களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இவர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதோடு கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வருகிறார்.
இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிகிஷன் இதுகுறித்து கூறுகையில், “பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக பலரும் பேசுகின்றனர். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது சினிமாவில் சகஜமாக நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் சில முன்னணி நடிகைகள், நடிகர்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. உங்களை விற்று பெறும் வாய்ப்பினால் எதிர்காலத்தில் நிலைக்க முடியாது என்று கூறிய ரவிகிஷன் இவ்வாறு திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு தன்னை விற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்தோம் என்ற நினைப்பே கொடுமைப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
ரவிகிஷனுக்கு முன்னதாக இதே குற்றச்சாட்டை இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர்சிங் , நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.