மணிப்பூர் வெள்ளத்தின் போது மக்களுக்கு சேவை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி – குவியும் பாராட்டுகள்..!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. வெள்ளத்தினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் 12,500 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. மேலும் அரசாங்கம் சார்பாக 101 பாதுகாப்பு முகாம்கள் துவங்கப்பட்டு அதில் 6000 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் வெள்ளம் தடுப்பு பிரிவின் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி திலீப் சிங் ஈடுப்பட்டிருந்தார். கழுத்தை வரை இருந்த வெள்ளநீரில் இறங்கி மக்களுக்காக உதவி செய்த அவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடன் நீர்வளத்துறை மந்தி லெட்போ கியாகிப் உடனிருந்தார்.
மேலும், பல அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். திலிப் சிங்கிற்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் ஒரே நாளில் ஹீரோவாக மாறியுள்ளார். இவர்களை போன்ற நல்ல தலைவர்களை பார்க்க முடியாது என அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.